Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை!

சென்னை தாம்பரம் அடுத்துள்ள  புது பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்  யசோதா ராணி. 42 வயதான இவர் அதே பகுதியில் ஒரு தையல் கடை நடத்திவருகிறார்.

இன்று மதியம் யாரோ  அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம், யசோதா ராணி ரொம்ப நேரமாக ஆத்திரத்துடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யசோதா ராணியின் கழுத்தில் பலமாக  குத்திவிட்டு உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை பார்த்த  அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் 108 வாகனத்தில் வந்த ஊழியர்கள் யசோதாராணியை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு , ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம்  குறித்து பீர்க்கன்கரணைபோலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், யசோதா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது  குறித்துபோலீசார் நடத்திய விசாரணையில், யசோதாவை கொலை செய்த நபர் சேலையூரைச் சேர்ந்த 42வயதுடைய செல்வகுமார்என்பது தெரியவந்தது. செல்வகுமார் – யசோதா ராணி இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் சொல்லப்படுகிறது.

செல்வகுமார் யசோதா ராணியிடம் சென்று நாம் இருவரும் வெளியே செல்லலாம் என அழைத்துள்ளார். ஆனால் யசோதா ராணி  ” இப்பொழுது என்னால் வர முடியாது, எனக்கு வேலை இருக்கிறது ” என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த செல்வகுமார், யசோதா ராணியை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து செல்வகுமாரை கைது செய்வதற்காக  பீர்க்கங்கரணை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

Categories

Tech |