வெட்டப்பட்ட தலையுடன் பெண்ணொருவர் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்ரைன் நாட்டின் கார்கில் பகுதியில் வசித்து வருபவர் டாட்டியானா(38) அண்ணனுடன் வசித்து வரும் டாட்டியானா மகள் கிறிஸ்டினா(11). இன்று பிளாட்டிற்கு வெளியே இருக்கும் சாலையில் யாரும் எதிர்பாராத வகையில் டாட்டியானா கையில் ரத்தம் சொட்டிய கத்தியுடன் பிளாஸ்டிக் பை ஒன்றில் துண்டிக்கப்பட்ட மகளின் தலையை வைத்து கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார் இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். டாட்டியானாவின் அண்ணன் வீட்டில் தலையில்லாமல் குழந்தையின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை மடக்கி கைது செய்ய முயற்சித்த பொழுது கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார் டாட்டியானா. பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர்.இதுகுறித்து பெண்ணின் அண்ணன் கூறுகையில் “டாட்டியானா வேலைக்கு சென்று வந்தார் ஏழ்மையாக இருந்தாலும் சமூகத்தில் பின் தங்கி இருந்தார் என கூற முடியாது” எனக் கூறினார்.
வீட்டின் அருகில் வசிப்பவர் கூறுகையில் “டாட்டியானா சாதாரணமாகவே இருந்தார். சந்தேகத்திற்குரிய மாற்றம் எதுவும் அவளிடம் தெரியவில்லை. போதைப் பொருட்களுக்கும் மதுவிற்கும் டாட்டியானா அடிமை இல்லை. பொது விடுமுறை அன்று மட்டும் மது அருந்துவார். அவளது குழந்தை கிறிஸ்டினா மிகவும் அழகாக இருப்பார். குழந்தை பள்ளிக்கு சென்று வருகிறார் வேறு என்ன சொல்ல முடியும்” என்றுள்ளார்