மதுரை மாவட்டம் கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் கடந்த 5 ஆம் தேதி விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று அதிகாலை மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்த மர்ம குமபல் சிகிச்சை பெற்றுவந்த முருகனை வெட்டி படுகொலை செய்தது. இதை கண்ட செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பதறி போயினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கார்த்திக் விசாரணையை தொடங்கினர்.
போலீஸ் விசாரணையில்ஒரு பெண்ணின் தூண்டுதலில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.
முன்பகை:
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றின் மைய மண்டப பகுதியில் கஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்துரு, முருகன் இரண்டு பெரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையியல் பட்டா ராஜேந்திரனின் மனைவி ராஜேஸ்வரி தனது கணவரை கொலை செய்தவர்களை பழிக்கு பலி வாங்குவதற்காக திட்டம் தீட்டி வந்தார்.
இந்நிலையில் பட்டா ராஜேந்திரன் கொலையில் முதல் குற்றவாளியான சந்துரு என்பவரை 3 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் சந்துரு காயங்களுடன் தப்பினர்.
இதை தொடர்ந்து இரண்டாவதாக கரும்பாலை முருகனை தீர்த்து கட்டுவதற்காக சினிமா பாணியில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் ராஜேஸ்வரி. அதற்கான தகுந்த வாய்ப்பாக கரும்பாலை முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சமயத்தை பயன்படுத்தி நோட்டமிட்டு ஆள் பலத்தோடு இந்த படுகொலையை செய்துள்ளார்.
மருத்துவமனையில் உள்ள CCTV காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து கரும்பாலை பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன், விக்னேஸ்வரன்,கரன்ராஜ் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.