ஒரு டம்ளர் பாலிற்காக தந்தை மகனையும் சகோதரனையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேசம் புரான்பூர் பகுதியில் சோஹன்னா கிராமத்தை சேர்ந்த குருமுக் சிங் இவர் மகன் மகள் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த திங்கள் கிழமை அன்று மகள் மற்றும் மனைவி வெளியே சென்ற பொழுது வீட்டிலிருந்த மகன் ஜஸ்கரனிடம் பால் கொண்டுவர கேட்டுள்ளார். ஜஸ்கரன் பால் கொண்டு வந்து கொடுக்க டம்ளரில் பாதி அளவு பால் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த தந்தை குருமுக் மகனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த குறுமுக் சிங்கின் சகோதரன் அவ்தார் சிங் மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறுமுக் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இரக்கமின்றி இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார். அதன் பின்னர் தான் தான் செய்த தவறை உணர்ந்த குறுமுக் சிங் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டிற்கு திரும்பிய குறுமுக் மனைவி மற்றும் மகள் மூவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து குறுமுக் சிங்கின் மற்றொரு சகோதரன் பல்வீர் சிங் காவல் நிலையத்தில் புகாரளிக்க புகாரின் அடிப்படையில் குறுமுக் சிங் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஒரு டம்ளர் பாலிற்காக நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.