Categories
உலக செய்திகள்

19 வயது மனைவியை கொன்று கிணற்றில் வீசிய 40 வயது கொடூர கணவன்..!!

40 வயதுடைய நபர் தனது 19 வயது மனைவியை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நைஜீரியாவில் இருக்கும் மடாபு டபவா கிராமத்தை சேர்ந்த 40 வயதான அப்துல் ரகுமான் என்பவர் இரண்டாவதாக 19 வயதுடைய வசிலா சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் காவல் துறையினருக்கு அப்துல் வீட்டின் அருகேயே இருக்கும் கிணற்றில் ஏதோ மிதப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றது.

அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கிணற்றில் பார்த்தபொழுது அப்துல் ரகுமானின் இரண்டாவது மனைவி சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அப்துல் ரகுமான் மனைவியை கொலை செய்தது தெரிய வந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |