Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவருடன் தகராறு…. மகனுடன் வசித்து வந்த தாய் கொலை…. காணாமல் போன மகன்…. தேடுதல் வேட்டையில் பொலிஸ்….!!

கணவருடன் பிரிந்து இருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம், வசந்தம் நகர் பகுதியில்  வசித்து வருபவர், நீலாவதி (42). அப்பகுதியில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். நீலாவதிக்கும் அவரது கணவர் ராமதாஸ்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து வருடங்களாக கணவரைப் பிரிந்து அவரது ஒரே மகனான அஜித் என்பவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை நீலாவதியும் அவரது மகனும் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்து அருகில் வசிப்பவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, நீலாவதி கழுத்தில் குத்துபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆசாரிப்பள்ளம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் நீலாவதியின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மகன் இல்லாத நிலையில், யாரேனும் நள்ளிரவில் புகுந்து கொலை செய்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், நீலாவதியின் மகன் அஜித் காணாமல் போய் உள்ளதால் அவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |