வீட்டை காலி செய்கிறேன் என பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து குடி இருந்துள்ளார். மூன்று வருட ஒத்தி முடிவதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்வதாக கூறி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் சிவகுமாருக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் முருகன் வீட்டிற்கு சிவகுமார் பணம் கேட்டு சென்றுள்ளார். அங்கு தகராறு ஏற்படவே முருகனின் மனைவி பவுன்தாயும் முருகனும் சேர்ந்து சிவகுமாரை கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே சிவக்குமார் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து ராயப்பன்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கணவன் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.