Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தகாத வார்த்தையால் திட்டினார்…. வியாபாரி வெட்டிக் கொலை…. 5 பேர் கைது….!!

வியாபாரியை வீட்டில் வேலை செய்த கார் டிரைவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜின் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை மோசமாக தாக்கியுள்ளனர். அதை தடுக்க முயற்சி செய்த செல்வராஜை கடையில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வராஜை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குன்றத்தூர் காவல்துறையினர் செல்வராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் செல்வராஜின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்த ஈசாக் என்பவர் தான் செல்வராஜை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேலும் ஈசாக்கிடம் விசாரணை மேற்கொண்டதில் செல்வாராஜ் தன்னை தகாத வார்த்தையால் திட்டிய ஆத்திரத்தால் அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஈசாக் கொலை செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.மேலும் இச்சம்பவத்திற்கான உண்மை காரணம் குறித்து ஈசாக் மற்றும் அவரது நண்பர்கள் நால்வரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |