ஜனாதிபதி திரௌபதி முர்மு, வங்க தேசத்தின் பிரதமரை லண்டனில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மகாராணியாரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு, மூன்று நாட்கள் பயணமாக லண்டனுக்கு சென்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மகாராணியார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து நேற்று, இறுதி ஊர்வலம் தொடங்கப்படுவதற்கு முன்பாக வங்காள தேசத்தினுடைய பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்திருக்கிறார். அதற்கு முன்பு, பக்கிங்ஹாம் அரண்மனையில், அரசர் சார்லஸ் வரவேற்பு வழங்கினார். அதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.