தமிழ் கடவுள் முருகன். முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் மிகவும் முக்கியமானது காவடி எடுப்பது . ஏன் எடுக்கிறோம் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்ற இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறியுள்ளார். அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க காவடி எடுத்து வந்துள்ளார். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளை விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.
இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து சென்று ஓய்வு எடுக்கும்படி சொல்லியுள்ளார். இடும்பனும் காவடியை கீழே இறக்கி ஓய்வு எடுத்துள்ளார். பின்னர் ஓய்வு எடுத்து புறப்பட தயாராகும் போது காவடியைத் தூக்க முயன்றபோது முடியவில்லை. பின்னர் எப்படி இந்த காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவண ஆண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான்.
இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அந்த சிறுவன் இந்த மலை தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றபோது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவி முருகனிடம் சென்று வேண்டி இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாக நியமித்தான்.
இதனை போல் காவடி ஏந்தி, சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் புரிவார் முருகன். இந்த நிகழ்வு முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் நடந்து வருகிறது.