முருகனை தமிழ் கடவுளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமுருகன் என்பவர் முருகனை தமிழ் கடவுளாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தான் முருகனை தமிழ் கடவுள் ஆக அங்கீகரிக்க வேண்டும் எனவும், அரசாங்கத்திடம் ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை தற்போது தான் நாடியுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஸ்வரர் மற்றும் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் அது இந்த நாட்டில் மத சார்பு தன்மையை பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்று கூறியுள்ளனர் .மேலும் முருகன் ஒருவரை மட்டுமே தமிழ் மொழியின் ஒட்டுமொத்த கடவுளாக முடியாது என்று தெரிவித்துள்ளனர்.