கொரோனா பரவலால் மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா எளிமையாக நடந்திருக்கிறது.
மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இங்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில், தற்போது கொரோனா அதிகரித்திருப்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் சாமிக்கு நேர்த்திக்கடன் செய்தனர். அதன்பிறகு, கோவிலுக்கு அருகில் இருக்கும் நதிக்கரையில் முருகருக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்டார்கள்.