Categories
மாநில செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன்….. மேலும் 2 வழக்கில் இன்று விசாரணை!

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி நகைக்கடையில் கடந்த ஆண்டு அக். 2ம் தேதி, 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருச்சி சமயபுரம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை அடித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் முருகனிடம் இருந்து 30 கிலோவிற்கும் மேலே தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் முருகனுக்கு பக்கவாதம் வந்தததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது வழக்கறிஞர் சார்பில் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக புகைப்படங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். இந்த மனு மீதான விசாரணை காணொலி மூலம் நடைபெற்ற நிலையில் திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். திருச்சி வங்கி கொள்ளை வழக்கு மற்றும் பாலக்கரை பகுதியில் காஸ் சிலிண்டர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் திருடியுள்ளார். இந்த 2 வழக்குகளில் ஜானின் மீதான கோரிக்கை மனு குறித்து இன்று விசாரணை நடைபெற உள்ளது. மேலும் சென்னையில் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக 14 வழக்குகள் மற்றும் ஆந்திர, கர்நாடகவிலும் முருகன் மீது 46 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதக்கது.

Categories

Tech |