முருங்கை கீரையில் வைட்டமின் ஏ.பி.சி புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ளது.
முருங்கை காய் இலையை, எடுத்து பின் மிஞ்சிய காம்புகளை, மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து சாப்பிட்டால், கை, கால் அசதி நீங்கும்.
முருங்கை கீரையை, வெள்ளரி விதையுடன், அரைத்து வயிற்றில் மேல் கனமாக பூச, உடலில் இருக்கும் நீர்க்கட்டை உடைத்து, சிறுநீரை பெருக்கும்.
முருங்கை கீரையை, உணவுடன் அதிகம் வேக விடாத, பொரியலாக சமைத்து உண்டால், கழுத்து வலி படிப்படியாக குறையும். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
முருங்கை பூ , ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி அதை 250 மில்லி பசும்பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் கற்கண்டு கூட்டி, ஒரு மண்டலம் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்பு தளர்ச்சி நீங்கும்.
முருங்கை பூவை சம அளவு, துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாததத்துடன், உண்டால் கண் எரிச்சல், வாய் நீர் ஊறல், வாய் கசப்பு மாறும்.
முருங்கை கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட்டாள், நீரிழிவு நோய் குணமாகும். முருங்கைகாய் சாப்பிட்டால் உடல் பலம் பெரும், வலிமை உண்டாகும். முருங்கை பட்டை கோழை, காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றை போக்கும். வியர்வையை பெருக்கும்.