Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மூச்சுத்திணறல்…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மூச்சுத்திணறி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சஞ்சீவினூர் பகுதியில் ரேஷன் கடை எதிரில் 45 வயதுடைய ஒருவர் சுயநினைவின்றி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக அவரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |