Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

”சளி த்தொல்லையை உடனடியாக விரட்டும்” தூதுவளை ரசம்…!!

சளி இருமலை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இத்தொகுப்பில் காண்போம்..!!

தேவையான பொருள்கள் . .

தூதுவளை இலை   –    ஒரு கப்

புளி                         –         எலுமிச்சை அளவு

மிளகு                     –          அரை டீஸ்பூன்

சீரகம்                      –         அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்  –          2

பூண்டு                    –            4 பல்

தக்காளி             –                   3

கடுகு                   –                  சிறிதளவு

சீரகம்                   –                சிறிதளவு

மிளகாய்              –             சிறிதளவு

உப்பு                       –      தேவையான அளவு

செய்முறை

காம்புடன் உள்ள தூதுவளை இலையை நன்கு கழுவி அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். பின் மிளகு, சீரகம் ,மிளகாய், பூண்டு, முதலியவற்றை  ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும் .ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சுட வைத்து .அதில் கடுகு, சீரகம், மிளகாய், போட்டு தாளித்து பின் தட்டி வைத்த இலையை போட்டு  ஒரே ஒரு வதக்கு வதக்கி மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, தட்டி வைத்துள்ளதை போட்டு. புளியை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். நுறைத்து  மேலே வரும் வரை காத்திருந்து பின் அதை இறக்கவும். சுவையான தூதுவளை ரசம் தயார்

 

 

Categories

Tech |