Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஓய்வூதியம் கொடுங்க….. சிரமப்படும் இசைக்கலைஞர்கள்…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 1 1/2 வருடமாக கோவில் திருவிழா, திருமணம் போன்ற அனைத்து விசேஷங்களும் கொரோனா தொற்று பாதிப்பினால் தடைபட்டுள்ளது.

இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கலைஞர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அடுத்து முதியவர்களுக்கு பென்ஷன், பேருந்து பாஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். அதன் பின் கலைஞர்களுக்கு இசைக்கருவிகளும், வீட்டுமனை பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |