Categories
சினிமா மாநில செய்திகள்

பாஜகவில் காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தீனா….. அண்ணாமலை பரபர அறிக்கை…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்தவர் தீனா. இவர் மெட்டிஒலி, சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். அதன் பிறகு ஏராளமான படங்களிலும் இசை அமைப்பாளராக தீனா பணியாற்றியுள்ள நிலையில் இவர் இசையில் வெளியான மன்மத ராசா மற்றும் கும்பிட போன தெய்வம் போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிலையில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலத்திற்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இசையமைப்பாளர் தீனாவை நடிகை காயத்ரி ரகுராம் வகித்து  வந்த பதவியில் அமர்த்துவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இது கட்சி வட்டாரத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |