சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார்.
அவர் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து வாக்களியுங்கள் என்று கூறியிருந்த நிலையில், 17 மில்லியன் பேர் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதில் 57% பேர் எலான் மஸ்க தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். தற்போது எலான் மஸ்க்குக்கு எதிராக வாக்கெடுப்பு வந்துள்ளதால், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் எலான் மஸ்க டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகினாலும் நிர்வாகம் அவர் வசமே இருக்கும். ஆனால் அவருக்கு பதில் வேறொருவர் டுவிட்டர் நிறுவனத்தின் நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வார்.