பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அரபு நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டித்துள்ளன.
பாஜக கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மா, ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருந்தது குறித்த ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் முகமது நபிகள் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். தற்போது அவரின் கருத்து சர்ச்சையாக மாறியிருக்கிறது.
அரபு நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. எனவே, உடனடியாக அவர் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதே போன்று டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டால் இணையதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அது வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என்று பாஜக, அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டது.
இந்நிலையில், பாஜக தலைவர்களின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து வளைகுடா நாடுகளில் இந்திய நாட்டின் தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு போராட்டம் நடக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் தலிபான்கள், நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து பேசியதற்கு கடுமையாக தெரிவித்துள்ளனர். முஸ்லிம் மதம் மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக செயல்படுவதை இந்திய அரசாங்கம் ஏற்கக்கூடாது என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.