Categories
உலக செய்திகள்

பிரான்சில் நெருங்கும் அதிபர் தேர்தல்…. அதிபர் வேட்பாளரிடம் முஸ்லீம் பெண் கேட்ட கேள்வி…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் தலையில் அணியக்கூடிய ஸ்கார்ப் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சில் தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எனினும் தங்களின் மதம் குறித்த ஒரு விஷயம் அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவதை  அவர்கள் விரும்பவில்லை. அந்நாட்டின் தற்போதைய அதிபரான இம்மானுவேல் மேக்ரோனுக்கு எதிராக களமிறங்கியுள்ள அதிபர் வேட்பாளரான மரைன் லீ பென், தான் அதிபரானால், பொது வெளிகளில் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதிக்கவுள்ளதாகவும் தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அவரின் அரசாங்கம், பயங்கரவாதம் முஸ்லிம்களின் கருத்துக்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து பல மசூதிகளை அடைக்க உத்தரவிட்டிருந்தது. எனவே முஸ்லிம்களின் ஆதரவு அவர்கள் இருவருக்கும் கிடையாது. இதனிடையே அதிபர் வேட்பாளரான லீ பென்னிற்கு அருகில் சென்ற ஒரு முஸ்லிம் பெண், அரசியலுக்குள் எங்கள் ஸ்கார்ப் எப்படி வந்தது? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் ஸ்கார்ஃப் என்பது தீவிரமான பார்வை உடையவர்கள் திணித்த சீருடை என்று கூறியிருக்கிறார். இது உண்மை கிடையாது என்ற அந்த பெண் வயதான பிறகு தான் நான் அதனை அணிய தொடங்குவேன். எனக்கு அது பாட்டியாக இருக்கக்கூடியதற்கான அடையாளம் என்று கூறியிருக்கிறார்.

முஸ்லிம் பெண்கள் தலையில் அணியக்கூடிய ஸ்கார்ப் அந்நாட்டு அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்சனை தேர்தல் முடிவுகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இனி தான் தெரியவரும்.

Categories

Tech |