Categories
கன்னியாகுமாரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

முஸ்லிம்கள் தமது வீட்டிலேயே தொழுது உற்சாகம் ….!!

பக்ரீத் பண்டிகை  கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவின் இதர பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திங்கள்சந்தை, திருவட்டார், திருவிதாங்கோடு உள்ளிட்ட பல ஊர்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. மசூதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். இறைதூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |