ராமர் கோவில் கட்டுவதற்காக முஸ்லீம் தொழிலதிபர் 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் இருந்து 1 கோடி குடும்பங்களை சந்தித்து நிதி திரட்ட இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இந்த நிதி சேகரிப்பு கடந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கியது. இதில் ஆயிரத்து 500 கோடி கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு சேர்ந்த கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள முஸ்லீம் தொழிலதிபர் ஹபீப் என்பவர் ராமர் கோயில் கட்டுவதற்காக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டியுள்ளனர்.