அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் முதல் தடவையாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் தராவீ இறைவணக்கம் செலுத்தினர்.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் மேன்ஹேட்டனில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் டைம்ஸ் சதுக்கம், மிகப் பெரிதான வர்த்தக பகுதி மற்றும் சுற்றுலா தளமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அங்கு சுமார் 5 கோடி மக்கள் வருகை தருகிறார்கள். இந்நிலையில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் தடவையாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் ரமலான் மாதத்தில் கடைபிடிக்கக் கூடிய நோன்பை முடித்துவிட்டு, டைம் சதுக்கத்தில் தராவீ இறை வணக்கம் செலுத்தினார்கள்.
ரமலான் மாதம் முழுக்க இந்த இறை வணக்கம் அங்கு நடக்கும். இந்த இறை வணக்கத்தின் முடிவில், அங்கு வந்திருந்த இஸ்லாமியர்கள் 1500 பேருக்கு சாப்பாடு வழங்கியிருக்கிறார்கள். இதனை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் தெரிவித்ததாவது, இவ்வாறு செய்வதால் எங்களை உருவாக்கிய அல்லாஹ்விற்கு மிக நெருக்கமானவர்களாக மாறுகிறோம். இஸ்லாம் மதம் பற்றி அனைவருக்கு விளக்குவதற்காக தான் இங்கு கூடியுள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.