Categories
தேசிய செய்திகள்

“லட்சுமி தேவியை வணங்காத முஸ்லிம்கள்” கோடீஸ்வரர்களாக இல்லையா….? பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு….!!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான். இவர் இந்து தெய்வங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் லட்சுமிதேவியை வணங்கினால் செல்வம் பெருகும் என்றும், சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெருகும் என்று கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை. அதற்காக அவர்கள் கோடீஸ்வரர்களாக இல்லாமல் இருக்கிறார்களா? அதன் பிறகு முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியையும் வணங்குவதில்லை. இதனால் முஸ்லிம்களில் அறிஞர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா என்று கூறியுள்ளார். அதன் பிறகு நீங்கள் நம்பினால் மட்டும்தான் அது தெய்வம் இல்லை எனில் அது வெறும் கற்சிலை தான்.

தெய்வங்களை நம்புவது என்பது அவரவர் நம்பிக்கை. ஆனால் நாம் என்றைக்கு தெய்வங்களை நம்பாமல் அறிவியல் ரீதியாக சிந்திக்கிறோமோ, அப்போதுதான் அறிவுத்திறன் மேம்படும். நீங்கள் கடவுளை நினைப்பதை மறந்து விடும் நாளில் இவை எல்லாமே முடிந்து விடும் என்று கூறியுள்ளார். மேலும் எம்எல்ஏவின் சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்துகள் கூறினால் முதல் ஆளாக பாஜக கண்டனம் தெரிவிக்க வரும் நிலையில், தற்போது தங்கள் கட்சி எம்எல்ஏவே  இந்துக்கள் குறித்த சர்ச்சை கருத்தை கூறியுள்ளதால், அவர் மீது என்ன நடவடிக்கை பாஜக எடுக்கப் போகிறது என்ற கேள்வியும் பலராலும் எழுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |