Categories
அரசியல் மாநில செய்திகள்

100% உண்மை இருக்கணும்…! ஒவ்வொரு தொகுதியிலும் ADMK மனு…! உடனே முற்றுப்புள்ளி வையுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழகத்தினுடைய இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழுவால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒட்டுமொத்த தொண்டர்களால், அவர்களுடைய பிரதிநிதிகளால் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற அண்ணன் எடப்பாடி அவர்கள் சார்பில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் நானும், நம்முடைய கழகத்தினுடைய தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துக்களை குறிப்பாக இன்றைய அஜெண்டாவில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்கின்ற ஒரு அஜெண்டா. இந்த அஜெண்டா குறித்துவிவாதத்திலே பங்கேற்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருத்துக்களாக பொதுவாகவே வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள்.

அதாவது, புகைப்படம் தவறாக இருப்பது, அதேபோன்று ஒரு தெருவில் வரிசையாக வந்த கதவு எண்கள் வரிசையாக இருக்கும் போது அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிப்பது, அது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளில் பல்வேறு குளறுபடிகள். இறந்தவர்கள் பெயரை நீக்க வேண்டும் என்று சொல்லி எவ்வளவோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் மனு கொடுத்தும் கூட, அந்த இறந்தவர்களின் பெயர்களை நீக்கவில்லை.

அதேபோல வேறு இடத்தில் வசிப்பவர்கள் சென்னையில் ஓட்டு வைத்திருப்பர் அதேபோல வெளி மாவட்டத்தில் போய் வேறு ஒரு ஓட்டு வெச்சிருப்பார் அங்கேயும் ஓட்டு போடுவார். இந்த இடத்திலும் ஓட்டு போடுவார், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். பியூரிஃபிகேஷன் எலக்ட்ரோ ரோல்களை பொறுத்தவரையில் 100% அளவிற்கு உண்மை இருக்க வேண்டும், அந்தக் கருத்தின் அடிப்படையில் எங்களின் கருத்தை சொன்னோம். அதையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டார்கள், ஆதார் அட்டை இணைப்பதன் மூலமாக நிச்சயமாக ஒரு முற்றுப்புள்ளி வரும் என்கின்ற கருத்தை சொல்லி இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |