எந்த காரணத்திற்காகவும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிறைய இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்கிருந்து சுமார் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். அவர்கள் இந்தியா வந்து நீட் தேர்வு எழுத முடியாத நிலை இருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் , இல்லையென்றால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த போது, இந்திய மருத்துவக் கவுன்சில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அந்தப் பத்திரத்தில், தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியா தவிர பிற இடங்களில் நீட் தேர்வு மையங்கள் நிறுவ முடியாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. நீட் தேர்வை மேலும் ஒத்திவைப்பதனால், மாணவர்களின் கல்வியிலும், அடுத்தடுத்த கல்வியாண்டு அட்டவணைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் நீட் தேர்வை செப்டம்பர் 13ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.