அட்லீயைப் போல ஆகவேண்டும் என்று ஊரை விட்டு ஓடி வந்த சிறுவர்களை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தில் இணைந்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லீயைப் போல ஆகவேண்டும் என்று இரண்டு சிறுவர்கள் அவர்களது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அச்சிறுவர்களை மீட்டு அறிவுரை கூறி அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.