Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“கடுகு எண்ணைய் சாப்பிடுவது எவ்வளவு நன்மை தெரியுமா”…? இனிமே இத யூஸ் பண்ணுங்க…!!

கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கடுகு எண்ணெய் பழக்கத்தில் உள்ளது. இன்னும் வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் கடுகு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பழக்கத்தில் நம் முன்னோர்கள் மருத்துவ குணமுள்ள உணவு பொருள்களை சமையலில் பயன்படுத்தி உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தனர். அதிலும் கடுகு எண்ணெய் இல்லாமல் நாம் சமையலை செய்யவே முடியாது.

அப்படிப்பட்ட வரிசைகளில் முதலில் இருப்பது கடுகு எண்ணைய் தான். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கடுகு எண்ணெய் பழக்கத்திலிருந்தது. கடுகு விதையிலிருந்து தான் கடுகு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதில் கருப்பு மற்றும் வெள்ளை கடுகு என்று பல வகைகள் உண்டு. இது உணவுக்கு மட்டுமல்ல கூந்தலுக்கும் மிகவும் நல்லது. நூறு கிராம் கடுகில் 884 கலோரிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் நியாசின், தயாமின், பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற நிறைய வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.

கடுகில் இருக்கும் நிறைய சத்துகள் ‘கடுகு எண்ணெய்யில்’ பெரும்பாலும் இருப்பதில்லை. குறிப்பாக கடுகு விதைகளில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. பைபர் மற்றும் ஸ்டார்ச்சை தருகிறது. ஆனால் கடுகு எண்ணையில் இவை அனைத்தும் இருப்பதில்லை என்று கூறுகின்றனர். கடுகு எண்ணெயில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. அதாவது நிறைவான கொழுப்பு, பாலிஅன்சாச்சுரேட் கொழுப்பு, மோனோன்சாச்சுரேட் கொழுப்பு இந்த கொழுப்புகள் உடலிற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பதாக உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெயில் 4 கிராம் நிறைவான கொழுப்பு நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன்  உணவில் எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது.  இதில் உள்ள நல்ல கொழுப்புகள் நமது சருமத்தை பளபளப்பாக வைக்கின்றது. நினைவாற்றலை அதிகரிக்க கடுகு எண்ணையை நாம் தினமும் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள ஒமேகா சத்தானது நம் உடம்பில் ரத்தம் உறைவதை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கவும் இது உதவுகிறது. கூந்தல் வளர்ச்சிக்கும் கடுகு எண்ணெய் பெரிதளவில் பயன்படுகின்றது.

கடுகு எண்ணெய் ஒரு சிலருக்கு அலர்ஜி தரக்கூடியதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அலர்ச்சியை தருவதாகவும், தோலில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.  இவ்வாறு  ஏற்படக்கூடிய அலர்ஜி என்பது பெரிதும் இல்லை. அப்படி அலர்ஜி ஏற்படுவதற்கு அறிகுறிகளாக முகத்தில் தடிப்பு உண்டாகும். அதிகப்படியான நீர் சுரத்தல். தொண்டை வலி, மூச்சு விட சிரமம், அடிவயிற்றில் வலி ஏற்படும். கடுகு எண்ணெய் பயன்படுத்தி இது போன்ற தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

Categories

Tech |