2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் காய்கறி, பழங்கள், பேரிச்சை பழம், நெல்லிக்காய், எலுமிச்சை பழம் போன்றவை கொடுக்கும் திட்டத்தினை திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைபூண்டி பாரதமாதா குடும்ப நல நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தினால் பயன் அடைந்துள்ள 100 கர்ப்பிணிகளுக்கு பிறந்துள்ள 100 குழந்தைகளுக்கு தினசரி ஒரு முட்டை கொடுக்கும் வகையில் மாதம் 3 ஆயிரம் முட்டைகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் திருத்துறைபூண்டி பாரதமாதா குடும்பநல நிறுவனத்தின் சார்பில் 2 வயதுக்குட்பட்ட 100 குழந்தைகளுக்கு தினசரி முட்டை வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்ச்செல்வி, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சங்கீதா மணிமாறன், மருத்துவர் பாஸ்கர், ஆரோக்கியசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.