Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘முதல் விக்கெட்டாக ,இவர அவுட் பண்ணது’… ‘எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு’….! மகிழ்ச்சியில் ஹர்ப்ரீத்…!!!

நேற்று நடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் ஹர்ப்ரீத் ,விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதை பற்றி பேசியுள்ளார் .

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன.இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில்  5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்திருந்தது. இதில் குறிப்பாக ராகுல் 91 ரன்களும் ,கிறிஸ் கெயில் 46 ரன்களும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. இது குறிப்பாக பஞ்சாப் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக , ஹர்ப்ரீத்  பிராரின்  ஆட்டம் சிறப்பாக இருந்தது.

இவர் பேட்டிங்கில் இறுதியாக ராகுலுடன் இணைந்து 25 ரன்கள் குவித்தும், அதேபோல் பந்து வீச்சிலும் ஒரே ஓவரில் விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் விக்கெட்களை கைப்பற்றி அதிரடி காட்டினார். இதற்கு அடுத்த ஓவரில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்றி ,ஆர்சிபி அணியின் 3 அதிரடி வீரர்களின் விக்கெட் கைப்பற்றினார்.  இதனால் இவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. வெற்றி பெற்ற பிறகு ஹர்ப்ரீத்  கூறும்போது, என்னுடைய பந்துவீச்சு முதலில் நான் விராட் கோலியை அவுட் செய்ததும் பதட்டம் அடையவில்லை. ஏனெனில் விக்கெட்டை வீழ்த்தினால் தான், இரண்டாவதாக பவுலருக்கு  வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, முதலில் விராட் கோலியின் விக்கெட் வீழ்த்தியது ,எனக்கு ஸ்பெஷலாக இருந்ததாக அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |