Categories
விளையாட்டு

மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை…சந்திரா தோமர் கொரோனாவிற்கு பலி…!!!

மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சந்திரா தோமர், கொரோனா தொற்றால்   பாதிக்கப்பட்டு  நேற்று உயிரிழந்தார்.

இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான சந்திரா தோமர், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டியிலுள்ள ,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

89 வயதான சந்திரா தோமர் தன்னுடைய 60 வயதிற்குப் பிறகுதான் ,முதன்முதலாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கு பெற்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்று ,மூத்தோருக்கான  தேசிய அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருடைய மறைவிற்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரியான கிரண் ரிஜிஜூ மற்றும் பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |