சென்னையில் முதல் முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவம் செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது.
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே பெரிய அரசு மருத்துவமனையாக பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமில்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவசர சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிமுதல் நேற்று நள்ளிரவு 12 மணிவரை 24 மணி நேரத்தில் 64 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் நடத்தி இம்மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஆசியாவிலேயே எந்த மருத்துவமனையிலும் இல்லாத வகையில் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் மருத்துவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.