Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில்…பரபரப்பான இறுதி கட்டத்தில்… தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி ….!!!

பாகிஸ்தான்- தென் ஆப்ரிக்காஅணிகளுக்கிடையே ,நடந்த முதல் ஒருநாள் போட்டியில், 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

செஞ்சூரியனில் நேற்று பாகிஸ்தான் -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையே ,  முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ,பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி, 55 ரன்கள் எடுக்க போவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் தென்னாப்பிரிக்கா வீரரான வான் டர் டுசன் நிதானமாக ஆடி சதமடித்தார். இறுதியாக தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்தது. இதில் கடைசி வரை டுசன் ஆட்டமிழக்காமல், 123 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி 274 ரன்களை, இலக்காக கொண்டு பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பகர் சமான் 8 ரன்களிலும், இமாம் உல் ஹக் 70 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதன்பின் களமிறங்கிய பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.இதன் பின் பாபர் அசாம் ,103 ரன்களில் அவுட்டானார். இறுதியில் சிறப்பாக விளையாடிய ஷதாப் கான் 29 ரன்களை எடுத்து வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது.  இறுதியில் பஹீம் அஷ்ரப் 3 ரன்களை எடுத்து ,பாகிஸ்தான் அணியை  வெற்றி அடைய செய்தார். இதனால் பாகிஸ்தான் அணி  1-0 என்ற கணக்கில் வெற்றியை  கைப்பற்றியது.

Categories

Tech |