Categories
உலக செய்திகள்

உலகின் முதல் பணக்காரர்…. அனைத்து இடங்களிலும் பரவிய 70 பிரண்டுகள்…. பத்திரிக்கையின் மூலம் கிடைத்த முக்கிய தகவல்….!!

பிரெஞ்ச் தொழிலதிபரான பெர்னார்டு அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரர் இடத்தை பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் ரியல் டைம் பட்டியலின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

பிரெஞ்சு தொழிலதிபர் மற்றும் Louis Vuitton Moet Hennessy என்னும் நிறுவனத்தின் உரிமையாளரான 72 வயதாகும் பெர்னார்ட் அர்னால்ட் என்பவருடைய 70 பிராண்ட்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் ரியல் டைம் என்னும் பட்டியலின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது உலகின் முதல் பணக்காரராக திகழும் அமேசான் நிறுவனத்தின் தலைவரை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட் தற்போது உலகின் முதல் பணக்காரராக திகழ்கிறார் என்பதாகும். ஏனெனில் பிரெஞ்ச் தொழிலதிபரின் சொத்து மதிப்பு 198.9 பில்லியன் டாலராகும்.

மேலும் 2-வது இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனத் தலைவரின் சொத்து மதிப்பு 194.9 பில்லியன் டாலர்களாகும். இதனையடுத்து 3 ஆவது உலகப் பணக்காரராக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |