வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் ஒருவர் ஆனந்த கண்ணீர் விட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வங்கதேச தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி 3 நிமிட சிறப்பு செய்தி வாசிப்பு நிகழ்ச்சி வழங்கபட்டது. தாஷ்னுவா அனன் ஷிஷிர் (29) என்பவர் சுகாதாரத்தில் இளங்கலை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதற்காக பல நிறுவனங்களில் முயற்சி எடுத்த பிறகு இறுதியாக “boishakhi “என்ற தொலைக்காட்சி அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. தனது முதல் செய்தியை வாசித்து முடித்தபின் தாஷ்னுவா ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து அவர் நான் வளரும் பருவத்தில் ஆணா பெண்ணா என்பதை தெரியாமல் இருந்தபோது திருநங்கை என்று உணர்ந்தவுடன் என் தந்தை என்னை புறக்கணித்து என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறி படிப்பை மட்டும் விட்டு விடக் கூடாது என்ற மன உறுதியில் இருந்து வந்தேன் .ஆனால் இச்சமுதாயத்தில் கேலியும் பாலியல் துன்புறுத்தலும் அதிகமாகவே இருந்தது. இதனால் சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றெல்லாம் நினைத்ததுண்டு.மேலும் பல இன்னல்களிலும் என் படிப்பை இறுதிவரை கைவிட வில்லை .
உலகம் முழுவதையும் தவிர்த்து வங்கதேசத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேலான திருநங்கைகள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் பிச்சை எடுத்து அல்லது பாலியல் தொழில் செய்து தங்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர். அவ்வாறு துன்பப்படுபவர்களுக்கு எடுத்துக்காட்டாக தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவதற்காகத்தான் கடவுள் என்னை படைத்துள்ளார். என்று தாஷ்னுவா கூறினார்.