ஓடையில் இருந்த முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டு தந்தை அதிர்ச்சியடைந்தார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன்வில் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள உணவகத்திற்கு வெளியே ஒரு சிறு ஓடை செல்கிறது. அந்த ஓடையில் ஓடையில் இருந்த முதலையுடன் 2 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அக்குழந்தையின் தந்தையான Joe Brenner பதறிப்போய் குழந்தையை உடனடியாக அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளார். மேலும் ஓடையில் சிக்கிய முதலை வெளியே வர முயன்றுள்ளது.
ஆனால் அந்த முதலையால் வெளிவர முடியாததால் நல்லவேளையாக குழந்தை எந்தவொரு காயமும் இன்றி தப்பித்தது. அதிலும் ஓடையில் இருந்த முதலையை குழந்தை ஆமை என்று நம்பி அதனுடன் விளையாடியுள்ளது. இந்த சம்பவமானது குழந்தையின் தந்தையான Joe Brennerக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டதனால் மிகப்பெரிய இழப்பை தவிர்க்க முடிந்தது.
இதன் பின்னர் விலங்குகள் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு முதலையை மீட்டனர். மேலும் ஓடையில் முதலை எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயரில் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே 4 அடி நீளமுள்ள முதலையானது சுற்றி திரிவதாகக் கூறினார்.