Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் ….!!

முத்தலாக் தடை சட்ட மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் ,

இந்த மசோதா பாலின நீதி , சமத்துவம் , கண்ணியம் தொடர்பானது  என குறிப்பிட்டார். பெண்களுக்கு உரிய நீதி வழங்க வலியுறுத்தி , இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதா நிறைவேறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Categories

Tech |