தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழககத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கி அதற்கான கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. மேலும் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27 தொடங்கி வருகின்ற 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி ஆகிய கல்லூரிகளில் தேர்வு பெற்ற மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 25-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறந்து 29ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகின்ற அக்டோபர் 25-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு 500 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும். அதற்காக மூன்றாவது மற்றும் நான்காவது கலந்தாய்வின்போது 77.5 மதிப்பெண்கள் பெற்றவர்கள் அழைப்பு விடுத்து நடப்பாண்டு பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்பப்படும்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பயோ டெக்னாலஜி பிரிவு இல்லை என்று கூறப்படுகின்ற நிலையில் அது பொய்யான தகவல் என்று கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம், பாரதி பல்கலைக்கழகம்மற்றும் காமராஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயோடெக்னாலஜி படிப்பிற்கான பிரிவு உள்ளது. தமிழகத்தில் எந்த படிப்பிற்கு 60 சதவிகித ஒதுக்கீடு முறை உள்ளது அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் இதில் பொருளாதாரம் பின்தங்கிய மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கிடையாது.
அதன் அடிப்படையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயோடெக்னாலஜி சேர்க்கை நடைபெறும். மேலும் தமிழக அரசு அறிவித்திருந்த படி, பொறியியல் படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. மேலும் இந்த திட்டத்திற்கு கீழ் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் பலர் வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.