முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கிறார்.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் காவேரி டெல்டா பாசனத்திற்கு வருகிற 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார். இதனை அடுத்து அணையை திறந்து வைப்பதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறையினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அணையை நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அணையின் நீர் வெளியேற்றம், நீர் இருப்புமற்றும் காவேரி அணைக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பது குறித்து அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டார். பின்னர் 16 கண் பாலம், வலது கரை, இடது கரை, பவளவிழா கோபுரம், கவர்னர் பாயிண்ட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.