தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பேசுகையில், கொரோனா பரவாமல் தடுப்பதற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கு நிவாரண நிதியை அரசு வழங்கி வருகின்றது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். முதல் அலையை விட இரண்டாம் அலை மிக மோசமானதாக இருக்கின்றது. இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்கின்றது.
கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசிகள் ஆகிய உள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்தி ஆகவேண்டும். படுக்கைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்க முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கூடுதல் மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பணியாளர்களை பணி அமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது