சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி மீண்டும் தேர்வு பெற்றார். அதனைப் போல பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர். சுப்புலட்சுமி விட்டு சென்ற இடத்திற்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் இருந்தால் எப்படி உட்கட்சி தேர்தலை நடத்தி இருப்பாரோ, அவரது வழியில் நீங்களும் கண்ணியம் கட்டுப்பாடோடு தேர்தலை நடத்தி முடித்து உள்ளீர்கள். அதற்காக எனது நன்றிகள், வாழ்த்துக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்து உங்களை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்து உள்ளார்கள்.
அதற்கு ஏற்ப தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தலைவராக பொறுப்பேற்று அனைத்து தேர்தலிலும் வெற்றி தான், இது கண்டிப்பாக தொடரும். உங்கள் உழைப்பை பார்க்கும் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும். எப்படியெல்லாம் கடின உழைக்கிறீர்கள் என்று. உங்களின் இந்த வெற்றிக்கு 50 ஆண்டுகால உழைப்பும், பிரச்சாரம் ஆகியவைதான் முக்கிய காரணம். உங்கள் வெற்றிக்கு நமது கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த கழகத் தொண்டர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுப்பீர்கள், உரிமை கொடுப்பீர்கள் என்று நம்பி மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதனை தொடர்ந்து நமது கழகத்தின் 19 அணிகளை சேர்ந்தவர்கள் இங்கே வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு இலக்கு கொடுக்க வேண்டும். அது உறுப்பினர் சேர்க்கையாக இருக்கலாம், எதுவாகவும் இருக்கலாம்.
திராவிட மாடல் குறித்து தமிழக முழுவதும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று இளைஞர் அணிக்கு கட்டளையிட்டிர்கள். அதற்காக கடந்த நான்கு மாதங்களாக பயிற்சி பட்டறை நடத்தி வருகிறோம். கிட்டத்தட்ட 200 தொகுதிகளின் திராவிடம் மாடல் பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட செயலாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிய தெரிவித்துக் கொள்கிறேன். எனவே 19 அணிகளுக்கு ஒரு இலக்க நிர்ணயிக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு அணியும் முக்கியம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மகளிர் அணி செயலாளராக இருந்த அத்தை கனிமொழி அவர்கள் துணை பொதுச்செயலாளராக வந்திருக்கிறார். மாணவர் அணி செயலாளராக இருந்த அண்ணன் துறைமுகன் அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராக வந்துள்ளார். இளைஞர் அணி செயலாளராக இருந்த நீங்கள் இன்று கழகத்தின் தலைவராக முதலமைச்சராக வந்துள்ளீர்கள். எனவே எங்கள் அனைவருக்கும் நீங்கள் கட்டளையிடுங்கள். வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலை விட மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அதற்காக நாங்கள் பாடுபடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.