தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பர் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் முன்பு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து போலீஸ் விசாரணை செய்தபோது, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் சுயேட்சையாக நிற்கிறேன் என்றும் தன்னை தேர்தலிருந்து விலகுமாறு சிலர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகிச்சை பெற்றுவரும் வெற்றிவேலை நலம் விசாரித்தார்.