தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உடல் நலத்திற்காக காலைவேளையில் சென்னை அடையார் தியாசபிகல் பூங்காவில் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் நேரடியாக முதல்வர் ஸ்டாலினுடன் தினமும் பேசி தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அதனைப் போலவே நேற்று மு.க.ஸ்டாலின் நடைப் பயிற்சி செய்யும்போது போது ஒருவர் முதல்வர் ஸ்டாலின் உடல் நலத்தை விசாரித்தார். அதன் பின்னர் நீங்கள் 5 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தன்னம்பிக்கையாக வெளியே நடமாட முடிகிறது. மேலும் நிர்வாகத்தில் நல்ல வளர்ச்சியைக் கொண்டு வந்த நீங்கள் லஞ்சத்தையும் கட்டுப்படுத்தினால் இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவரலாம் என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஒரு பெண்மணி ஸ்டாலினுடன் பேசிய அவர், உங்கள் ஆட்சியில் எல்லா பணிகளுக்கான சேவையும் நன்றாக நடந்து வருகிறது தொடர்ந்து இந்த சேவையை செய்து வாருங்கள் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதற்கு முதல்வர் சிரித்த முகத்துடன் கட்டாயமாக செய்து வருவேன் என்று கூறினார். இதனைப் போலவே நடைபயிற்சி ஈடுபட்டவர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தங்கள் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.