Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முதல்வரின் அறிவிப்பை மீறிச் செயல்படும் கெயில் நிறுவனம்…!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நாகையில் கெயில் நிறுவனம் மீண்டும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் சுற்று வட்டாரத்தில் 20 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. திரவக நிலையில் உள்ள, எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேட்டங்குடி, இட மடல், திருநகரி வழியாக 32 கிலோமீட்டர் தொலைவுக்கு எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை  கெயில் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கியது. விவசாயிகள் கடும் எதிர்ப்பால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே ஏழு மாதங்களுக்கு முன்னர் தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று  கூறியிருந்தார். இந்நிலையில் திருநகரி, உச்சிமேடு, வெள்ளகுளம், கேவர்ரோடை , இருவகொள்ளை ஆகிய இடங்களில் கெயில் நிறுவனம் அவசரகதியில் எரிவாயு குழாய்களை பதித்து வருகிறது. முதல்வரின் அறிவிப்பை மீறி விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கப்படுவது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |