மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் பாக்கியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனிமையில் வசித்து வந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
அப்போது அவர் அலறிய சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பாக்கியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாக்கியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவரின் தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.