மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வட்டம் கிழக்குவீதி பார்வையாளர் தெருவில் சிவஞானசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் கல்யாணி இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவரது மகன் அன்புசெல்வன் என்.எல்.சி 2-வது சுரங்கத்திற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனியாக வீட்டில் இருந்த கல்யாணி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதில் உடல் முழுவதும் தீ பற்றி எறிந்து சம்பவ இடத்திலேயே கல்யாணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.