Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்னால வாழ முடியல…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடிக்கடி உடல்நலக் கோளாறால் அவதிப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிஞ்சி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லலிதா அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனை அடுத்து லலிதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லலிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |