Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காய்கறி விற்று கொண்டிருந்த மூதாட்டி…. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழும் இவர் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அதன்பின் வசந்தா வழக்கம்போல் சாலையோரத்தில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூதாட்டியின் சுருக்கு பையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிக் கொலுசை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது பற்றி மூதாட்டி வசந்தா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் மர்ம நபர்கள் மூதாட்டியிடம் இருந்து பணத்தைப் பறித்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் அதன் அடிப்படையில் 3 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |