லண்டனில் பெண் ஒருவரின் பையை திருடிச்சென்ற நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் (87) கடந்த ஜூலை மாதம் 7 தேதி சூப்பர் மார்க்கெட்டிற்கு பேருந்தில் சென்றார். அதன் பிறகு தனக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் பேருந்தில் வீட்டை வந்தடைந்தார். வீட்டிற்குள் செல்ல கதவு பக்கத்தில் சென்றபோது திடீரென வந்த நபர் ஒருவர் கோலில் (42) பாட்டியின் கையிலுள்ள பையைப் பிடுங்கி தப்பி ஓட முயன்றுள்ளான். ஆனால் பையை எடுக்க முடியாத நிலையில் மூதாட்டியின் பின்பக்கத்தில் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு பையை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினான்.
மேலும் அந்த பையில் அவன் எதிர்பார்த்த அளவிற்கு பணம் எதுவும் இல்லை வெறும் ரூ. 60 மட்டுமே இருந்துள்ளது. இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு கை கால்களில் படுங்காயம் ஏற்பட்டுள்ளது.அதன்பிறகு தலைமறைவாக இருந்த கோலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவன் மீது மூதாட்டி காவல்துறையிடம் கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சவுத்வர்ரக் கிரவுன் நீதிமன்றத்தில் 2 நாட்களுக்கு முன்பு நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி கூறிய தீர்ப்பில் 6 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கபட்டது.